SKIP TO MAIN CONTENT

ஆறுமுகன் தொண்டமான் காலமானார்!

Facebook
Source: Facebook

1 min read

Published

Updated


Skip to article content

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். அவருக்கு வயது 55.

திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு - தலங்கம வைத்தியசாலையில் இன்று இரவு அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு காலமானதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

1964 ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்த அவர்,  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிறுவனரான அமரர் செளமிய மூர்த்தி தொண்டமானின் பேரனாவார்.

1990ஆம் ஆண்டு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக செயற்பாட்டு அரசியலுக்குள் பிரவேசித்த அவர் 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வென்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.

இலங்கையில் பல்வேறு அமைச்சு பொறுப்புகளை வகித்து வந்த அவர் இறுதியாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினை வகித்தார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now