SKIP TO MAIN CONTENT

மெல்பேர்ன் Holiday Inn கோவிட் பரவல்: மேலும் இருவருக்கு தொற்று உறுதி!

Medical staff work at a pop-up COVID-19 testing site in Brighton, Melbourne, Saturday, 6 February, 2021.
Medical staff work at a pop-up COVID-19 testing site in Brighton, Melbourne, Saturday, 6 February, 2021. Source: AAP

5 min read

Published

Updated


Skip to article content

விக்டோரிய மாநிலத்தின் தனிமைப்படுத்தல் மையங்களில் ஒன்றான Holiday Inn ஹோட்டலுடன் தொடர்புடையதாக மேலும் இருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த பரவல் மூலம் தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக தொற்றுக்கண்டவர்கள் ஏற்கனவே தொற்று இனங்காணப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என விக்டோரிய சுகாதார அமைச்சர் Martin Foley தெரிவித்தார்.

மூன்று வயதுக் குழந்தையொன்றும் பெண் ஒருவருமே இவ்வாறு புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இருவரும் இருவேறு வீடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தொற்றுக்குள்ளான Holiday Inn பணியாளர் ஒருவர் சென்றிருந்த நிகழ்வுக்கு இவர்களும் சென்றிருந்ததாகவும் கடந்த 12ம் திகதி முதல் இவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது

இதுதவிர வெளிநாட்டிலிருந்துவந்து ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுஒருபுறமிருக்க கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்கள் தொடர்பிலான விவரங்களை வெளியிட்டுள்ள விக்டோரிய சுகாதாரத் திணைக்களம் அந்த இடங்களுக்குச் சென்றவர்களை கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

அந்த விவரங்கள் பின்வருமாறு:

LocationSiteExposure period
Albert ParkAlberton Café198 Bridport StAlbert Park VIC 32068:50am - 10:10am9/2/2021
BrightonNorth Point Cafe2B North RdBrighton, VIC 31868:10am - 9:30am31/1/2021
BroadmeadowsCraigieburn Line train1:25pm - 1:59pm9/02/2021
Brandon ParkKmart, Brandon Park Shopping CentreCnr Springvale Rd and Ferntree Gully RdBrandon Park, VIC 31704:35pm - 5:10pm31/1/2021
Clayton SouthNakama Workshop85 Main RdClayton South, VIC 316911:15am - 12:00pm1/2/2021
CoburgFunction venue426 Sydney RdCoburg VIC 30587:14pm – 11:30pm6/02/2021
Glenroy513 Eltham to Glenroy bus routeGlenroy Railway Station towards Eltham1:35pm – 2:17pm9/02/2021
Glen WaverleyCommonwealth Bank, 28-32 Kingsway, Glen Waverley1:30pm-2:30pm 9/2/2021
Glen WaverleyHSBC Bank, 38 Kingsway, Glen Waverley2:15pm-3:30pm 9/2/2021
HeathertonMelbourne Golf Academy385 Centre Dandenong RdHeatherton, VIC 32025:19pm - 6:35pm1/2/2021
Hoppers CrossingCaltex Woolworths50 Old Geelong RdHoppers Crossing, VIC 30296:40am - 7:15am8/02/21
Hoppers CrossingCoates Hire Werribee148A Geelong RoadHoppers Crossing, VIC 30296:45am - 7:30am8/02/21
KeysboroughAces Sporting Club (Driving Range)Cnr Springvale Rd and Hutton RdKeysborough, VIC 317310:00pm - 11:15pm30/1/2021
KeysboroughKmart, Parkmore Keysborough Shopping CentreC/317 Cheltenham RdKeysborough, VIC 31734:00pm - 5:00pm31/1/2021
MaidstoneMarciano's Cakes126 Mitchell StMaidstone VIC 30129:45am - 10:25am5/2/2021
Melbourne AirportBrunetti: Terminal 4, Melbourne Airport4:45am - 1:15pm, 9/2/2021
Melbourne AirportTerminal 44:45am - 2:00pm, 9/2/2021
Melbourne901 Frankston to Melbourne Airport bus routeMelbourne Airport to Broadmeadows Railway Station1:02pm – 1:49pm9/2/2021
MelbourneExford Hotel199 Russell StMelbourne, VIC 300011:00pm - 11:35pm29/1/2021
Moorabbin AirportLululemon, DFO MoorabbinShop G-039/250 Centre Dandenong RdMoorabbin VIC 31945:00pm - 5:45pm1/2/2021
Noble ParkClub Noble46/56 Moodemere StNoble Park VIC 31742:36pm -3:30pm30/01/2021
Point CookThe Coffeeologist Café70/300 Point Cook RdPoint Cook VIC 303011:30am-12:10pm10/2/2021 
South MelbourneStowe Australia67 – 69 Buckhurst StSouth Melbourne VIC 320510:30am -10:45am8/02/2021
SpringvaleBunnings Springvale849 Princes HwySpringvale, VIC 317111:30am - 12:15pm1/2/2021
SpringvaleColes Springvale825 Dandenong RdSpringvale, VIC 31715:00pm - 6:00pm31/1/2021
SpringvaleSharetea Springvale27C Buckingham AveSpringvale, VIC 31716:50pm - 7:30pm1/2/2021
SpringvaleWoolworths Springvale302 Springvale RdSpringvale, VIC 31716:30pm - 7:30pm1/2/2021
SunburyCellarbrations34 Batman AvenueSunbury VIC 34295:44pm - 6:19pm7/2/2021
SunburyCellarbrations34 Batman AvenueSunbury VIC 34296:17pm - 7:02pm6/2/2021
SunburySunny Life Massage - Sunbury Square Shopping Centre2-28 Evans StreetSunbury VIC 34294:30pm - 6:30pm6/2/2021
SunburyPJ's Pet WarehouseShop 2, 104 Horne StreetSunbury VIC 34293:37pm - 4:10pm5/2/2021
SunburyBakers Delight - Sunbury Square Shopping Centre2-28 Evans StreetSunbury VIC 34293:40pm - 4:15pm5/2/2021
SunburyAldente Deli - Sunbury Square Shopping Centre2-28 Evans StreetSunbury VIC 34293:45pm - 4:23pm5/2/2021
SunburySushi Sushi - Sunbury Square Shopping Centre2-28 Evans StreetSunbury VIC 34293:53pm - 4:28pm5/2/2021
SunburyAsian Star - Sunbury Square Shopping Centre2-28 Evans StreetSunbury VIC 34293:57pm - 4:30pm5/2/2021
SunshineDan Murphy's47 McIntyre RdSunshine VIC 30205:50pm - 6:30pm5/2/2021
SunshineDan Murphy's47 McIntyre RdSunshine VIC 30206:50pm - 7:30pm6/2/2021
Taylors LakesOff Ya Tree Watergardens399 Melton HighwayTaylors Lakes VIC 30381:00pm - 1:52pm6/2/2021
West MelbourneKebab Kingz438 Spencer StWest Melbourne, VIC 300311:24pm -12:15am29/1/2021

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now