SKIP TO MAIN CONTENT

Thunderstorm Asthma: கணவன்மாரை இழந்தவர்கள் Ambulance Victoria மீது வழக்கு!

Ambulance Victoria vehicles
The Ombudsman found multiple cases of Ambulance Victoria billing patients treated without transport. (AAP) Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

Thunderstorm Asthma எனப்படுகின்ற கொடிய ஆஸ்துமா நோயினால் கடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்த பத்து பேரில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவர் உட்பட இருவர் தத்தமது கணவன்மாரின் இறப்புக்கு Ambulance Victoria மற்றும் Emergency Services Telecommunications Authority ஆகியவைதான் காரணம் என்றுகூறி வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

தாங்கள் அழைத்தபோது உடனடியாக ambulance வாகனத்தை அனுப்பியிருந்தால் தங்களது கணவன்மாரின் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்று இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட Priyantha Peiris கடந்த 2016 ஆம் ஆண்டு Thunderstorm Asthma நோயினால் இறந்திருந்தார். அவரது மனைவி Ann Peiris முதலாவதாக வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.

இதைத்தொடர்ந்து Thunderstorm Asthma தாக்குதலினால் தனது கணவரை காவு கொடுத்த Ela Voong என்பவரும் நட்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தனது கணவர் Thunderstorm Asthma தாக்குதலினால் பாரதூரமாக பாதிக்கப்பட்டபோது Ambulance Victoria-க்கு தாங்கள் அழைத்தபோதும் ambulance வந்து சேர்வதற்கு அரை மணிநேரத்திற்கும் அதிகமாகிவிட்டது என்றும் சரியான நேரத்தில் வந்திருந்தால் தனது கணவரை காப்பாற்றியிருக்கலாம் என்றும் Ela Voong தனது வழக்கில் குறிப்பிட்டிருக்கிறார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now