பணத்தை சேமிக்க முடியவில்லையா? இதோ சில உதவிகள்!

AAP

Source: AAP

உலகிலே வாழ்வதற்கு மிகவும் உகந்த நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் நாம் வாழ்ந்து வந்தாலும் இங்கு வாழ்க்கைச் செலவு அதிகம்.

எனவே நன்கு திட்டமிட்டு செலவுகளை மேற்கொள்வது மிகவும் அவசியம்.அது எப்படி என்று பார்ப்போம்.

வீடு, குழந்தை பிறப்பு, அக்குழந்தையின் பாடசாலைச் செலவு என செலவுகளுக்குப் பஞ்சமிருப்பதில்லை.அதிலும் குறிப்பாக வரவுக்கு மீறிய செலவு இருக்கும் குடும்பங்களின்பாடு மிகவும் திண்டாட்டமாக இருக்கும். எந்தச் செலவாக இருந்தாலும் அதைச் சமாளிப்பதற்கு இரண்டு விடயங்கள் தேவை.

முதலாவது நன்கு வடிவமைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம்.மற்றையது பணத்தைச் சேமிப்பது.
AAP
New Home in Moving Box Source: AAP
சொத்துக்களின் விலை அதிகரிப்பால் ஒரு வீட்டை வாங்குவது பலருக்குக் கடினமாக இருக்கலாம்.

குறிப்பாக புலம்பெயர்ந்து வந்து இங்கே வாழ்பவர்கள் தமது தாய்நாட்டில் வாழும் சொந்தங்களுக்குப் பணம் அனுப்புவதால் வீடு வாங்குவதற்கென பணத்தைச் சேமிப்பது கடினமானது. ஆனால் உங்களது வருமானத்தின் சிறுபகுதியை வீடு வாங்குவதற்கெனச் சேமியுங்கள்.
AAP
Man Examining Stack of Coins Source: AAP

அடுத்ததாக பல வீடுகளின் முக்கிய செலவு பிள்ளைகள் சம்பந்தமானது. பாடசாலை சுற்றுலா, சீருடை போன்றன உட்பட பிள்ளைகளுக்கான செலவுகளை எப்படிக் கையாளலாம் என்பதற்கான ஆலோசனைகள் ASIC- Australian Securities and Investment Commission இன்  MoneySmart இணையத்தளத்தில் இருக்கின்றன.
AAP
Source: AAP
அத்துடன் ஏதாவது முக்கிய செலவுக்கென பணத்தைக் சேமிக்கிறீர்கள் என்றால் அதற்கென வட்டி விகிதம் அதிகமாக உள்ள இன்னொரு வங்கியில் கணக்கை ஆரம்பிப்பது மிகவும் சிறந்தது. மேலும் வெவ்வேறு முக்கிய செலவுகளுக்கென வெவ்வேறு வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தலாம்

மேலும் எதிர்பாராத சம்பவங்களால் எதிர்பாராத செலவுகள் எவருக்கும் எப்போதும் ஏற்படலாம். எனவே இதற்கென ஒரு தொகை பணத்தை எப்போதும் ஒதுக்கி வைத்தால் அவசர நேரங்களில் கைகொடுக்கும்.
AAP
Terrified woman escaping from expenses Source: AAP

அதேபோல் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தனிநபர்களும் வேலையிலிருந்து தாம் ஓய்வு பெறுவது தொடர்பில் retirement planner மற்றும் superannuation calculator ஆகியவற்றைப் பயன்படுத்தி முன்கூட்டியே திட்டமிடலாம்.

இதேவேளை தனிநபர்கள் பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கைகளுக்கென அதிக பணம் செலவிடாதபடி எச்சரிக்கையாயிருப்பது நல்லது. அதேபோல் குடும்பங்களும் தமக்கென ஒரு நிதித் திட்டமிடலை ஏற்படுத்தி அதன்படி செலவுகளை மேற்கொள்ளவது அவசியம்.
AAP
Young Couple on Fire Escape Source: AAP

நிதித்திட்டமிடலுக்கான பல உதவிகள் ASIC இன் https://www.moneysmart.gov.au/tools-and-resources/publications/other-languages என்ற இணையத்தளத்தில் வெவ்வேறு மொழிகளில் கிடைக்கின்றன. மற்றும் கைபேசி App களும் கிடைக்கின்றன.

இது தவிர இலவச நிதியாலோசனைகளைப் பெறுவதற்கான ASIC இன் உதவிகளை https://www.moneysmart.gov.au/managing-your-money/managing-debts/financial-counselling என்ற இணைப்பினூடாக பெற்றுக் கொள்ளலாம்.



Share

Published

Presented by Renuka.T

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand