SKIP TO MAIN CONTENT

Titanic கப்பல் மீண்டு(ம்) வருகிறது!

Titanic கப்பல் மீண்டு(ம்) வருகிறது!

Titanic
Source: Public Domain

1 min read

Published

Source: Hindustan Times


Skip to article content

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் உட்பட 11 அகடமி விருதுகளை வென்று, ஹாலிவுட் திரைப்பட வரலாற்றில் அதுவரை எந்த ஒரு திரைப்படமும் வசூலில் ஒரு பில்லியனைத் தாண்டியதில்லை என்ற நிலையில், 1997 இல் இரண்டு பில்லியன் டொலர்களை வசூலித்து, வெள்ளித்திரையில் ஓடிய, Titanic மீண்டும் ஓடப்போகிறது- வெள்ளித்திரையில் அல்ல, நீலத்திரைக்கடலில்.

ஆம். 1912ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் ஸ்டாக்ஹோமுக்கும் நியுயோர்க்கிற்கும் இடையே வெள்ளோட்டம் விடப்பட்ட Titanic, வட அட்லாண்டிக் சாகரத்தில் மூழ்கியதும், 1503 பேர் இறந்ததும் 705 பேர் காப்பாற்றப்பட்டதும் வரலாற்றில் பதிவான பிரதான நிகழ்வுகளில் ஒன்றாகும். மூழ்கடிக்கப்படமுடியாத கப்பல் என்று சொல்லப்பட்ட Titanic, iceberg என்ற பனிமலையில் மோதி மூழ்கியது. அதே Titanic கப்பலை, Titanic 2 என்ற பெயரில், மீண்டும் வடிவமைக்கும் பணி இப்போது நடந்துகொண்டிருக்கிறது. 600 மில்லியன் டாலர் செலவில் தயாராகும் இந்தக்கப்பலில், Titanaic 1இல் இருந்த Turkish Bath, Squash court, swimming pool, grand staircase எல்லாமே அப்படியே அமைக்கப்பட்டுள்ளன. கம்பளங்கள், விரிப்புகள், திரைச்சீலைகள் எல்லாமே அதே பாணியில் அதே வர்ணத்தில் தயாராகின்றன.

இந்த Titanic 2 ஐ Bluestar என்ற நிறுவனம் நிர்மாணித்து வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர் ஆஸ்திரேலிய  கோடிஸ்வர ரும் அரசியல்வாதியுமான Clive Palmer.

Titanic 2 , 2018 ஆம்ஆண்டு சீனாவில், Jiangsu துறைமுகத்திலிருந்து, துபாய்க்கு பயணிக்கவிருக்கிறது.

Recreating History- வரலாற்றை மீள்புனைவு செய்யும் இந்த நிகழ்வுபற்றிய மேலும் விபரங்களை அறிய SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள் இரவு கேளுங்கள்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now