SKIP TO MAIN CONTENT

கனடா துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தமிழ்ப்பெண் மரணம்! மற்றொருவர் காயம்!!

TPS
Source: TPS

1 min read

Published

Updated


Skip to article content

கனடா Scarborough, Toronto–வில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தமிழ்பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மற்றொரு பெண் காயமடைந்துள்ளார்.

Brimley Rd & Pitfield Rd பகுதியில் இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றவுடன் அங்கு சென்ற பொலிஸார் இரு பெண்கள் காயமடைந்தநிலையில் இருப்பதைப் பார்த்து உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

எனினும் இவ்விரு பெண்களில் ஒருவர் மரணமடைந்துவிட்டதாகவும் மற்றொருவர் உயிருக்கு ஆபத்தற்ற நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பலியான பெண் Toronto-வைச் 38 வயதான தீபா சீவரட்ணம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக Toronto பொலிஸார் கூறியுள்ளனர்.

என்ன காரணத்திற்காக இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது என்பது தொடர்பிலான தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை. 

அதேநேரம் இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபரை பொலிஸார் தேடிவருகின்றனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிவந்தவர் தம்மைத் தொடர்புகொள்ளுமாறும் Toronto பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now