நியூஸிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவின் சில மாநிலங்களுக்கும் இடையிலான இரண்டு வார தனிமைப்படுத்தல் இல்லாத பயணங்களை கிறிஸ்மஸிற்கு முன்னர் மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியமுள்ளதாக நியூஸிலாந்து பிரதமர் Jacinda Ardern தெரிவித்துள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான - தனிமைப்படுத்தல் கட்டுப்பாடற்ற - பயணத்தை ஆரம்பிப்பதற்கு ஆஸ்திரேலிய தரப்பிலிருந்து முன்னர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதனை ஏற்றுக்கொள்வதில் நியூஸிலாந்தை பொறுத்தவரையில் சில சிக்கல்களிருந்தன.
ஆனால், தற்போது ஆஸ்திரேலியாவில் சில பிரதேசங்கள் அதிகூடிய கிருமித்தாக்கத்துக்கு உள்ளான பிரதேசங்களாக பிரகடனப்படுத்தி, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பல கட்டங்களின் வழியாக தொற்றுநீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலிய அரசின் இந்த அணுகுமுறை, இரு நாடுகளுக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட பயணங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புக்களை திறந்துள்ளது - என்று Jacinda Ardern மேலும் தெரிவித்துள்ளார்.
Share
