பெற்றோரும் மிக நெருங்கிய உறவினராகக் கருதப்படுவதாக உள்துறை அமைச்சு அறிவித்திருந்தது நாம் அறிந்த செய்தி. அவர்களை நாட்டிற்கு வரவழைக்க விண்ணப்பிக்கலாம் என்று அண்மையில் பிரதமர் அறிவித்திருந்தார்.
பெற்றோருக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக, உள்துறை அமைச்சின் இணையத்தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
நாட்டின் Covid-19 கட்டுப்பாட்டு விதிகளின் கீழ், ஒருவரின் மிக நெருங்கிய உறவினர் மட்டுமே இங்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அண்மைய அறிவிப்புக்கு முன்னர், பெற்றோர் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கவில்லை. அறிவிக்கப்பட்டுள்ள மாற்றம் பல குடும்பங்களை ஒன்றிணைக்க உதவும் என்று உள்துறை அமைச்சர் Karen Andrews கூறினார்.
இந் நாட்டிற்கு வர விண்ணப்பிக்கும் போது, ஒருவரைப் பெற்றெடுத்த (biological) மற்றும் தத்தெடுத்த (adoptive) பெற்றோர் மட்டுமின்றி, சட்டப்படி பெற்றோர் என்ற உரிமையுள்ளவர்களும் (legal, step-parent மற்றும் parent-in-law) மிக நெருங்கிய உறவினர் என நவம்பர் முதலாம் தேதிக்குப் பின்னர் கணிக்கப்படுவார்கள்.
அவர்கள் விண்ணப்பிக்கும் போது, அவர்களது பிள்ளைகளின் (அல்லது பிள்ளையின்) குடியுரிமையை மற்றும் அவர்களுடனான உறவு குறித்தும் நிரூபிக்க வேண்டும். பிறப்புரிமை சான்றிதழ், தத்தெடுத்த சான்றிதழ், திருமணச் சான்றிதழ், போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். வேறு உதாரணங்களும் உள்துறை அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் பெற்றோருக்கு கடவுச்சீட்டு, வீசா, தடுப்பூசி போட்டதற்கான சான்று என்பன கண்டிப்பாகத் தேவை.
அவர்கள் எந்த மாநிலத்திற்குப் பயணம் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து, கட்டுப்பாடுகள் மாறுபடலாம்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த 18 மாதங்களாகத் தம் உறவுகளைப் பிரிந்து வாழும் பெற்றோர் விரைவில் இணைவதற்கு வழி கிடைத்துள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.