ஆஸ்திரேலியாவின் கருவூலக்காப்பாளர்-Treasurer Josh Frydenberg கொரோனா தொற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற கேள்விநேரத்தின்போது பதிலளித்துக்கொண்டிருந்த Josh Frydenberg தொடர்ச்சியாக இருமியதையடுத்து, உடனடியாக அமர்வை விட்டு வெளியேறி மருத்துவ அதிகாரியிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
அவர் வழங்கிய அறிவுறுத்தலின்படி Josh Frydenberg கொரோனா தொற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கொரோனா சோதனை தொடர்பான முடிவு நாளை வெளிவரும்வரைக்கும் Josh Frydenberg தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக உரையாற்றியபோது தொண்டை வரண்டு தனக்கு இருமல் ஏற்பட்டதாக Josh Frydenberg தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் - கடந்த மார்ச் மாதம் - Josh Frydenberg கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவருக்கு நோய் தாக்கம் இல்லை என்று மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share
