SKIP TO MAIN CONTENT

பால்காரர் Sean Connery ஜேம்ஸ் பாண்ட் ஆன கதை!

Sean Connery worked as a coffin polisher, milkman and lifeguard before his bodybuilding hobby helped launch an acting career.
Sean Connery worked as a coffin polisher, milkman and lifeguard before his bodybuilding hobby helped launch an acting career. Source: AAP

3 min read

Published

By R.Sathiyanathan


Skip to article content

Bond, James Bond......இந்த குரலுக்குச் சொந்தக்காரர், original James Bond, Sean Connery சரியாகச் சொன்னால், Sir Sean Connery, தனது 90 ஆவது வயதில் நேற்று முன்தினம், உறக்கத்திலேயே உயிர் நீத்தார்.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த நிலையில், பிரிட்டிஷ் agent அல்லது அரச ஒற்றன்-spy, ஆகப் பணியாற்றிய James Bond கதாபாத்திரத்திரத்தில் முதன் முதலில் 1962 இல் Dr. No என்ற திரைப்படத்தின் மூலம் தன்னை வலுவாக நிலை நிறுத்திக்கொண்டவர் original Bond, Sean Connery. Scotland ஐத் தாயகமாகக் கொண்ட Sean Connery Dr. No என்ற ஒரே படத்தின் மூலமாக, அகில உலக Super Star ஆனார்.

Sean Connery James Bond
Source: United Artists

Dr. No வின் வெற்றியைத் தொடர்ந்து From Russia With Love, Goldfinger, Thunderball, You only Live Twice, Diamonds are Forever என்று, பிரபல நாவலாசிரியர் Ian Fleming இன் கற்பனை கதாநாயகனான James Bond இற்கு உயிரூட்டியவர் Sean Connery என்பதுமட்டுமல்ல, அந்த கதாபாத்திரம் சாகாவரம் பெற்றதும் அவரால் தான்.

Bond ஆக அவர் நடக்கும் நடை, அவரது confident- மன உறுதி, stylish and charming manner -ஸ்டைலான வசீகரப்படுத்தும் உடல்மொழி, wry humour - அர்த்தம் நிறைந்த நகைச்சுவை, வில்லன்களையும் அழகான பெண்களையும் வார்த்தைகளால் மடக்கும் பாங்கு , violent edge- நினைத்ததை முடிக்கும் தீட்சண்யம் , ஆழமான பாத்திர அமைப்பு என்பன ஒரு agent அல்லது ஒற்றனுக்கான வரைவிலக்கணம் இதுதான் என்று வரையறையானதோடு, அவருக்குப் பின் இந்த பாத்திரத்தை ஏற்று நடித்த பல நடிகர்களுக்கு ஒரு formula வாகவும் அமைந்து போனது.

Sean Connery
Source: Twitter

தற்போது James Bond பாத்திரத்தில் நடித்துவரும் பிரபல நடிகர் Daniel Craig, Sean Connery இன் மரணம் பற்றி கருத்து தெரிவிக்கையில், ‘திரையுலகின் மிகப் பெரிய ஆளுமைகளுள் ஒன்று மறைந்து போனது என்றும், he defined an era and a style- ஒரு யுகத்தையும் அந்த யுகத்துக்கான பாணியையும் உருவாக்கியவர்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

1930 இல் Scotland இல் மிகவும் பின்தங்கிய Edinburg பகுதியில் பிறந்தThomas Sean Connery, இளமையில், milkman-வீட்டுக்கு வீடு பால் டிலிவரி செய்பவராகவும், பிரேதப்பெட்டிகளுக்கு பாலிஷ் போடுபவாரகவும் பின்னர் lifeguard என்ற நீரில் மூழ்குபவர்களைக் காப்பாற்றுபவராகவும் பணியாற்றியிருக்கிறார். அதன்பின்பு, body building என்ற உடலைக் கட்டுமஸ்தாக வைத்துக்கொள்ளும் பயிற்சியில் ஈடுபட்டு, தனது உடலை உறுதியாக்கிக் கொண்டார். Mr universe போட்டியில் இறுதிச்சுற்றுவரை சென்றார். சேக்ஸ்பியர் நாடகங்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்தார்.

VINTAG
Source: Vintag

பிரபல நாவலாசிரியர் Ian Fleming இன் நாவல்களுள் ஒன்றான Dr. No-வை திரைப்படமாக்கும் உரிமையைப் பெற்றிருந்த அமெரிக்கத் தயாரிப்பாளர்கள் அப்போது ஹாலிவுட்டில் மிகப்பிரபலமாக இருந்த Cary Grant ஐ James Bond ஆக நடிக்க அணுகினார்கள். ஆனால் அவருக்கு நேரமில்லை என்ற நிலையிலும் படத்தினுடைய பட்ஜட், 1 மில்லியன் டாலர்கள் என்பதாலும், இந்த பாத்திரத்திற்கு பிரிட்டிஷ் நடிகர்களை audition செய்தார்கள். Audition இற்கு வந்த Sean Connery ஐ screen test செய்யாமலேயே ஒப்பந்தம் செய்தார்கள். இப்படித்தான் original James Bond திரைக்கு வந்தார்.

ஒரு கட்டத்தில் இந்த Bond image இல் இருந்து வெளியேவரவேண்டும் என்று தீர்மானித்து James Bond கதாபாத்திரங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். ஆனால் சாகாவரம் பெற்ற Bond இற்கு பெரிய ரசிகர் கூட்டமும் எல்லையில்லா சந்தை வாய்ப்புகளும் இருந்ததால், James Bond ஆக அவர் வகுத்த பாதையில், Roger Moor, Thimothy Dalten, Pierce Brosnan போன்ற நடிகர்கள் நடித்தார்கள்.

Bond கதாபாத்திரங்களில் நடிப்பதை நிறுத்திய பின்னர் பல திரைப்படங்களில் வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தார் Sean Connery. 1987 இல் அவர் நடித்த The Untouchable என்ற திரைப்படத்திற்காக அவருக்கு Academy விருது வழங்கப்பட்டது. Indiana Jones and the Last Crusade, Hunt for Red October போன்ற படங்கள், அவர் பிற்காலத்தில் நடித்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். அவருக்கு 59 வயதில், People சஞ்சிகை Sexiest man alive என்ற பாரட்டை அவருக்கு வழங்கியது.

AP
Source: AP

அவர் நாடகத்துறையிலும் சினிமாத்துறையிலும் ஆற்றிய பங்களிப்புக்காக 2000-மாம் ஆண்டு எலிஸபெத் மகாராணியால் knighthood வழங்கப்பட்டு அன்று தொடக்கம் Sir Sean Connery ஆனார். American Film Institute அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதை வழங்கியிருக்கிறது.

1962 இல் ஆஸ்திரேலிய நடிகையான Diane Cilento வை திருமணம் செய்த இவருக்கு Jason என்ற மகன் இருக்கிறார். அவரும் நடிகரே. 1974 இல் Diane ஐ விவாகரத்து செய்தார். 1975 இல் Michelin Rockburn ஐத் திருமணம் செய்தார்.

சுதந்திர Scotland என்ற இயக்கத்தின் பிரதான ஆதரவாளரான Sean Connery , கடற்படையில் பணியாற்றும்போது, Scotland. Foreverஎன்று தன் கையில் பச்சை குத்தியிருந்தார்.

Sean Connery leads a procession up New York's Sixth Avenue as part of a bagpipe band of about 10,000 people on 6 April 2002.
Source: AAP

சுமார் நான்கு தசாப்தங்களாக வெள்ளித்திரையில் கோலோச்சிய Sean Connery கடந்த சில வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். Bahamas தீவில் அவர் கடைசிக்காலத்தில் வாழ்ந்துவந்தார்.

Best ever James Bond என்று புகழப்படும் Sean Connery மறைந்தாலும் அவர் நம்முன் நிறுத்திய கதாபாத்திரம் Bond , James Bond மறையாது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now