SKIP TO MAIN CONTENT

மெல்பேர்னில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை

Ahmed Mohamed, Abdullah Chaarani and Hamza Abbas have been found guilty of plotting a terrorist attack.
Source: Supplied: Jeff Hayes

1 min read

Published

Updated


Skip to article content

மெல்பேர்னில் கிறிஸ்மஸ் தினத்தன்று பாரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இருவருக்கு 28 ஆண்டுகளும் மற்றொருவருக்கு 16 ஆண்டுகளும் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று மெல்பேர்ன் நகரில் கூரிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பாரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் சகோதரர்களான Ibrahim Abbas(27), Hamza Abbas(24) மற்றும் Abdullah Chaarani(29), Ahmed Mohamed(27) ஆகிய நால்வரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இத்தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியும் குழுவின் தலைவருமாக கருதப்பட்ட Ibrahim Abbas-க்கு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஏனைய மூவருக்குமான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

இதன்படி Abdullah Chaarani, Ahmed Mohamed ஆகியோருக்கு தலா 28 ஆண்டுகளும் Hamza Abbas-க்கு ஆகக்குறைந்தது 16 ஆண்டுகளும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now