மெல்பனில் நான்கு பொலீஸார் கொல்லப்பட்ட கோர விபத்துடன் தொடர்புடைய truck ஓட்டுனருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் திகதி பிற்பகல் 5.30 மணியளவில் அதிவேகமாக காரில் சென்ற ஒருவரை பொலீஸார் மறித்து Eastern நெடுஞ்சாலை ஓரத்தில்வைத்து சோதனை செய்தபோது அவ்வழியாக வந்த truck- பொலீஸார் மீது மோதியது. இதில் நான்கு பொலீஸார் பலியானார்கள்.

இதைத்தொடர்ந்து Mohinder Singh என்ற 48 வயது ஓட்டுனரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், போதைப்பொருள் பாவனை, விபத்தை ஏற்படுத்தக்கூடியவகையில் வாகனத்தை ஓட்டியமை உள்ளிட்ட பல பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பொலீஸார் குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, Mohinder Singh-க்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாகவும் ஆகக்குறைந்தது 18 ஆண்டுகளும் 6 மாதங்களும் இவர் சிறையில் கழிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
குறித்த நபர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், மருத்துவ ரீதியாக இனங்காணப்பபடாத மனநிலை கோளாறு அவருக்கு ஏற்கனவே இருந்திருக்கலாம் எனவும் ஓட்டுனரின் வழக்கறிஞர் நீதிமன்றில் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
