குழந்தைகள் துள்ளி விளையாடும் Jumping Castle- இலிருந்து பள்ளிச்சிறுவர்கள் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் 5 சிறுவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்திருக்கிறார்கள்.
இந்தச்சம்பம் இன்று வியாழக்கிழமை காலை டஸ்மேனியாவின் Devonport பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பள்ளியின் கடைசி நாளான இன்று மாணவ - மாணவிகளின் விடுமுறையையொட்டி பாடசாலையினால் ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு நிகழ்விலேயே இந்தக் கொடூரம் இடம்பெற்றுள்ளது.
திடீரென்று வீசிய கடும் காற்றினால் மேலே பறந்த Jumping Castle-இலிருந்து வெளியே வீசப்பட்ட மாணவர்கள் சுமார் பத்து மீற்றர் உயரத்திலிருந்து விழுந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலீஸார் காயமடைந்த மாணவ - மாணவிகளை வைத்தியசாலைகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இரண்டு குழந்தைகள் ஹெலிக்கொப்டர் மூலம் மேலதிக சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டஸ்மேனியா Hillcrest Primary School பாடசாலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தினால், குறிப்பிட்ட பிரதேசம் மாத்திரமன்றி சுற்றுவட்டார மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பாதிப்புக்குள்ளாகாத மாணவ - மாணவிகளை பெற்றோர் உடனடியாக வந்து அழைத்துச்சென்றனர்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
