மெல்பன் மயானத்திற்குள் இரவுவேளையில் திருட்டுத்தனமாக நுழைந்து அடக்கம் செய்யப்பட்ட சடலங்களைத் தோண்டியெடுத்து அதன் பாகங்களைத் திருடிச்சென்ற இனந்தெரியாத விநோதத் திருடர்கள் குறித்து பொலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மெல்பனின் Footscray பொது மயானத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி இரவு, மயானத்திற்குள் நுழைந்த சிலர் சடலமொன்று அடக்கம் செய்யப்பட்ட இடத்தினைக் கிளறி, அருகில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியைச் சேதப்படுத்தியிருந்தனர் என்று கூறப்படுகிறது.
அத்துடன், புதைகுழியிலிருந்து சடலத்தை வெளியில் எடுத்து அதன் தலையை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மயானத்தின் நிர்வாகம் கூறியபோது - வேறு எந்த புதைகுழிகளிலும் இவ்வாறான சேதங்கள் விளைவிக்கப்படவில்லை என்றும் ஒரேயொரு இடத்தில் மாத்திரமே, இவ்வாறு திருட்டு இடம்பெற்றிருந்தது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தச் சம்பவம் இடம்பெற்று சில நாட்களில், - நேற்று செவ்வாய்க்கிழமை மற்றுமொரு சடலத்தின் தலை திருடுபோயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் உடனடியாகப் பொலீஸாரிடம் முறையிடப்பட்டதையடுத்து, அவர்கள் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளார்கள்.
மயானத்தின் நிர்வாகம், அடுத்தடுத்து இடம்பெற்ற இரண்டு சம்பவங்களையடுத்து, மயானத்தின் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
