SKIP TO MAIN CONTENT

உள்ளாடை விவகாரத்தால் 9 ஆஸ்திரேலியர்கள் கைது!

Instagram
Source: Instagram

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: SMH



Skip to article content

மலேசியாவில் நடைபெற்ற Sepang Formula 1 Grand Prix போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் Daniel Ricciardo வெற்றிபெற்றதை, தமது உடைகளைக் களைந்து உள்ளாடையுடன் கொண்டாடிய 9 ஆஸ்திரேலியர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த ஆஸ்திரேலியர்கள் அணிந்திருந்த உள்ளாடை மலேசிய தேசியக்கொடியை அடையாளப்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாகவும் இந்த உள்ளாடைகளை அவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து வாங்கிச் சென்றிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதையடுத்து தேசியக் கொடியை அவமதித்தமை மற்றும் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டமை உள்ளிட்ட பிரிவுகளில் 9 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களில் ஆஸ்திரேலியாவின் Defence Industry அமைச்சர் Christopher Pyne இன் defence innovation  ஆலோசகர் Jack Walker உம் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now