போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து உள்வாங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என குடிவரவு அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் 12 ஆயிரம் சிரிய அகதிகளை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 6507 பேர் இங்கு வருகை தந்துள்ளனர்.
இந்தப்பின்னணியில் குறித்த 12 ஆயிரம் பேரையும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தும் செயற்பாடு வெற்றிகரமாக நிறைவேறும்பட்சத்தில் சிரியா மற்றும் ஈராக் போன்ற போர் நடைபெறும் நாடுகளிலிருந்து மேலதிகமாக அகதிகள் உள்வாங்கப்படலாம் என அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.
ஆனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 12 ஆயிரம் என்ற எண்ணிக்கையை அதிகரிக்கும் எண்ணமில்லை என APEC மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் Malcolm Turnbull செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் உள்வாங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
Share
