SKIP TO MAIN CONTENT

உலகை அச்சுறுத்தும் ZIKA வைரஸ் – ஒரு சிறு விளக்கம்

உலகை அச்சுறுத்தும் ZIKA வைரஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா?

Zika
Source: AAP

2 min read

Published


Skip to article content

தென் அமெரிக்காவில் பல நாடுகளில் ZIKA வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகின்றது. மலேரியா, டெங்கு, சிக்கன்குன்யா போன்று, ஸீக்காவும், நுளம்புகள் அல்லது கொசுக்களால் பரவுகிறது. Aedes என்ற ஒருவகை நுளம்புகளே இந்த ஸீக்காவைப் பரப்புகின்றன. இவ்வகை நுளம்புகள் குறிப்பாக பகல் பொழுதில் பெருமளவில் வெளியே வருவதாகச் சொல்லப்படுகிறது. ஸீக்கா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரை இவ்வகை நுளம்பு கடித்தபின்பு மற்றொருவரை அது கடித்தால், அவருக்கு இந்த வைரஸ் பரவும் அபாயம் இருக்கிறது.

கர்ப்பிணிப் பெண் ஒருவரது உடலில் இந்த வைரஸ் நுழைந்தால் அவரது கர்ப்பப் பையில் உள்ள சிசுவை இந்த வைரஸ் தாக்கும் என்றும், இதனால் அச் சிசுவுக்கு மோசமான birth defects -உடற் குறைபாடு ஏற்படலாம் என்றும் அறிக்கைகள் சொல்கின்றன. கருவிலுள்ள சிசுவின் மூளையை இது தாக்கும் என்றும் மிகச்சிறிய தலையுடன் குழந்தைகள் பிறக்கக் கூடிய அபாயம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அமெரிக்கா, ஆசிய பசிபிக் நாடுகளுக்கு இந்த வைரஸ் தற்போது பரவிவருகிறது. ஆஸ்திரேலியாவில் இதுவரை இரண்டு பேரை இந்த வைரஸ் பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் இருபது பேர் இங்கு பாதிக்கப்பட்டிருப்பதாக மற்றொரு செய்தி சொல்கிறது.

இந்த வைரஸுக்கான தடுப்புமருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஸீக்கா வைரஸ் காரணமாக வைத்திய ரீதியான சர்வதேச அவசரகால நிலைமை ஒன்று (International Health Emergency) ஏற்பட்டிருப்பதாக WHO- உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த நோய் மிக வேகமாகப் பரவிவரும் நாடுகளுக்குப் பயணம் செய்வதை குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் மறுபரிசீலனை செய்யுமாறு அது அறிவித்திருக்கிறது.

இந்த நோயின் அறிகுறிகள் என்ன, சிகிச்சைகள் என்ன, ஆஸ்திரேலியாவில் இந்த வைரஸ் வேகமாகப் பரவக்கூடிய சாத்தியம் இருக்கிறதா, இதற்கான தடுப்புமருந்துகள் கண்டுபிடிக்கும் பணி எவ்வளவு வேகமாக நடைபெற்று வருகிறது....... ?

 

இந்த விபரங்களை SBS தமிழ் ஒலிபரப்பில் மிக விரைவில் எதிர்பாருங்கள்.

 

The alarming spread of the Zika virus - caused in major part by the infamous Aedes aegypti mosquito, which can also carry dengue, yellow fever and chikungunya virus - is looking more and more like a public health catastrophe.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now