பிரபல பயண மற்றும் சுற்றுலா நிறுவனமான Lonely Planet-இன் 2018ம் ஆண்டுக்கான, உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 இடங்களில், கன்பரா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
"Rich with history, culture and entertainment, it offers something for every kind of traveller." "என கன்பராவை Lonely Planet நிறுவனம் வர்ணித்துள்ளது.
இதேவேளை முதல் இரண்டு இடங்களில் Seville (Spain), Detroit (USA) ஆகியன இடம்பெற்றுள்ளன.
நான்கு முதல் பத்தாவது இடங்களை Hamburg(Germany) ,Kaohsiung (Taiwan), Antwerp (Belgium), Matera (Italy), San Juan (Puerto Rico), Guanajuato (Mexico) Oslo (Norway) ஆகிய பிரதேசங்கள் பிடித்துள்ளன.
