SKIP TO MAIN CONTENT

உலகில் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா?

Norway
Source: Pixabay

1 min read

Published

Updated

Presented by Renuka.T



Skip to article content

உலகில் மக்கள் சந்தோஷமாக வாழ்கின்ற நாடுகளின் புதிய பட்டியல் World Happiness Report நேற்று வெளியிடப்பட்டது.

இதன்படி 2017ம் ஆண்டின் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையை நோர்வே பெறுகிறது. இரண்டாம் இடத்தை டென்மார்க்கும் மூன்றாமிடத்தை ஐஸ்லாந்தும் பெறுகின்றன.  நியூசிலாந்து 8ம் இடத்தில் உள்ள அதேநேரம் ஆஸ்திரேலியா 9வது இடத்திலுள்ளது.

மேலும் இந்தியா 122 வது இடத்தையும், பாகிஸ்தான் 80 வது இடத்தையும், நேபாளம் 99 வது இடத்தையும், இலங்கை  120 வது இடத்தையும் பெற்றிருக்கின்றன.

ஒவ்வொரு நாட்டினதும் தனிநபர் வருமானம், ஆயுட்காலம், அரச உதவிகள், தாராளமனப்பான்மை, சுதந்திரம், ஊழலற்றதன்மை உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாக வைத்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 20 இடங்களைப் பிடித்துள்ள நாடுகள்:

1. Norway (7.537)

2. Denmark (7.522)

3. Iceland (7.504)

4. Switzerland (7.494)

5. Finland (7.469)

6. Netherlands (7.377)

7. Canada (7.316)

8. New Zealand (7.314)

9. Australia (7.284)

10. Sweden (7.284)

11. Israel (7.213)

12. Costa Rica (7.079)

13. Austria (7.006)

14. United States (6.993)

15. Ireland (6.977)

16. Germany (6.951)

17. Belgium (6.891)

18. Luxembourg (6.863)

19. United Kingdom (6.714)

20. Chile (6.652)

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now