SKIP TO MAIN CONTENT

உலகின் மிக ஆபத்தான நச்சுக்காளான் ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக கண்டுபிடிப்பு!

A local photographer snapped the mystery fungus in suburban Cairns earlier this year.
A local photographer snapped the mystery fungus in suburban Cairns earlier this year. Source: Supplied: Ray Palmer

1 min read

Published


Skip to article content

உலகின் மிக ஆபத்தான நச்சுக் காளான்களில் ஒன்றான Poison Fire Coral Fungus ஆஸ்திரேலியாவில் வளர்வது முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Cairns பகுதியில் வளர்ந்திருந்த இக்காளானை Ray Palmer என்ற  புகைப்படக் கலைஞர் கண்டுபிடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து இது தொடர்பில் ஆராய்ச்சி செய்த ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் இது Fire Coral நச்சுக்காளான் என்று உறுதிப்படுத்தப்பட்டதாக அறிவித்தது.

மேலும் இக்காளான் ஏன் இந்தளவு நஞ்சுத்தன்மையை கொண்டுள்ளது என்பது தெரியவில்லை என இப்பலைக்கழக ஆராய்ச்சியாளர் Dr Matt Barrett தெரிவித்தார்.

அழகிய ஆரஞ்சு வண்ணத்தில் காணப்படும் இந்தக் காளான்வகை கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டுள்ள பின்னணியில் இது ஆஸ்திரேலியாவில் கணிசமானளவு பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்தவகை காளானை உட்கொண்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், உடல் மரத்துப்போதல் உள்ளிட்டவை ஏற்படும் அதேநேரம் மூளை சுருங்கி உடலுறுப்புகள் செயலிழந்து மரணம் விளையக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

அதேநேரம் குறித்த காளானில் உள்ள நச்சுப்பொருட்கள் தோலின்வழியாகவும் உடலில் உறிஞ்சப்படும் என குறிப்பிடப்படுகிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now