SKIP TO MAIN CONTENT

உலகின் நம்பர் 1 பணக்காரர் யார் தெரியுமா?

Jeff Bezos
Jeff Bezos, founder of Amazon, has reason to smile - he's just become the richest person on earth. (AAP) Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka.T


Skip to article content

Forbes சஞ்சிகையின் தரவரிசைப்படி Amazon நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான Jeff Bezos, Microsoft நிறுவனர் Bill Gates-ஐப் பின்னுக்குத்தள்ளி, குறுகிய நேரத்திற்கு உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார்.

நேற்றைய தினம் Amazon பங்குகள் உயரத் தொடங்கியதால்  Jeff Bezos-இன் சொத்து மதிப்பு 90.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும்,  Bill Gates-இன் சொத்து மதிப்பு 90.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் காணப்பட்டதையடுத்து  Bill Gates-ஐப் பின்னுக்குத் தள்ளி Jeff Bezos முதலிடத்தைப் பெற்றார்.

எனினும் ஒரே இரவில் Amazon பங்குகள் வீழ்ச்சியடைய Bill Gates தனது முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

Forbes சஞ்சிகையின் தரவரிசைப்படி உலகின் முதல் 10 இடங்களிலுள்ள செல்வந்தர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

  • Bill Gates — Microsoft
  • Jeff Bezos — Amazon
  • Amancio Ortega — Zara
  • Warren Buffet — Berkshire Hathaway
  • Mark Zuckerberg — Facebook
  • Carlos Slim Helu — Telecom (Mexico)
  • Larry Ellison — software mogul
  • Michael Bloomberg — Bloomberg LP
  • Berard Arnault — LVMP
  • The Koch Brothers

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now