SKIP TO MAIN CONTENT

உலக தலைவர்களின் மத்தியில் உடல் பருமன் குறைக்கும் போட்டி!

Pacific Island leaders attend last year's Pacific Islands Forum in Apia, Samoa.
Pacific Island leaders attend last year's Pacific Islands Forum in Apia, Samoa. Source: AFP

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

பசுபிக் தீவுகளின் தலைவர்கள் கூடுகின்ற அடுத்த மாநாட்டில் தலைவர்களின் மத்தியில் எடை குறைக்கும் போட்டி ஒன்றை அறிவிக்கப்போவதாக Tonga  பிரதமர் Akilisi Pohiva தெரிவித்துள்ளார்.

உடல் பருமன் அதிகரித்துவரும் பிரச்சினையினால் பசுபிக் தீவுகளில் உள்ள மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் இதன் விளைவாக நாட்டு மக்களின் ஆயுட்காலம் வீழ்ச்சியடைந்துவருவதாகவும் கூறியுள்ள Akilisi Pohiva இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு நாட்டு தலைவர்கள் முன்மாதிரியாக நடந்தும்கொள்ளும் வகையில் இந்த போட்டியை அறிவிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

எடை அதிகரிப்பினால் பாதிக்கப்படும் மக்கள் தொகை கொண்ட நாடுகளின் வரிசையில் ஏழாவது இடத்திலுள்ள Tonga தீவுகள் இதுவிடயத்தில் கரிசனை செலுத்தவேண்டிய அவசியம் உள்ளதாகவும் ஏனைய பசுபிக் தீவுகளும் இந்த பட்டியலில் இடம்பெறுவதால் அவர்களும் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரம் பசுபிக் தீவுகளின் தலைவர்களின் மாநாட்டில் கூடும்போது தலைவர்கள் அனைவரிடமும் இந்த எடைகுறைக்கும் போட்டி தொடர்பான அறிவிப்பை விடுக்கவுள்ளதாகவும்,  ஒரு வருடத்துக்கு பின்னர் மீண்டும் கூடும்போது, அதிகம் எடை குறைப்புச் செய்த நாட்டுத்தலைவரை வெற்றியாளராக அறிவிக்கலாம் என்றும் Akilisi Pohiva கூறியிருக்கிறார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now