SKIP TO MAIN CONTENT

உலகையே டஸ்மேனியா பக்கம் திரும்ப வைத்துள்ள கடற்கரை!

Instagram
Source: Instagram

1 min read

Published

Updated

Presented by Renuka.T



Skip to article content

ஆஸ்திரேலியாவின் டஸ்மேனியா மாநிலத்திலுள்ள Preservation  விரிகுடா பிரகாசமான நீலநிறமாக ஒளிர்ந்ததையடுத்து அப்பகுதிக்கு பெருமளவான மக்களும் புகைப்படக்கலைஞர்களும் படையெடுத்துவருகின்றனர்.

Chatwin Photography
Source: Chatwin Photography

கடந்த சனிக்கிழமை இரவு, குறித்த கடற்பகுதி பிரகாசமான நீல நிறத்தில் ஒளிர்ந்ததைக் கண்ட Brett Chatwin என்ற புகைப்படக் கலைஞரும், அப்பகுதியில் வாழ்ந்த பலரும், அதைப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததையடுத்து, இச்செய்தி உலகெங்கும் பரவியுள்ளது.

இந்தநிலையில் மீண்டும் இவ்வாறான அதிசயம் நிகழாதா என்ற ஆர்வத்தில் Preservation கடற்கரைக்கு பெருமளவானோர் சென்றுவருகின்றனர்.

Chatwin Photography
Source: Chatwin Photography

இதேவேளை குறித்த கடற்பகுதி அவ்வாறு பிரகாசமான நீலநிறமாக மாறியதற்கு Sea Sparkling எனப்படும் பாசிகள் தான் காரணம் எனவும், இவை தம்மைத் தற்காத்துக் கொள்ளும் நோக்கில் ஒளியை உற்பத்திசெய்ததால் அக்கடற்பகுதி பிரகாசமான நீலநிறமாக தோற்றமளித்ததாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now