SKIP TO MAIN CONTENT

ஊழல் மிகுந்த நாடுகளில் ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை நாடுகளுக்கு எத்தனாம் இடம்?

ஊழல் மிகுந்த நாடுகளில் ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை நாடுகளுக்கு எத்தனாம் இடம்?

Parliament
Source: AAP

1 min read

Published

By Raymond Selvaraj


Skip to article content

உலகில் ஊழல் மிக்க நாடுகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும் Transparency International எனும் அமைப்பு கடந்த ஆண்டு ஊழல் மிகுந்த நாடுகளை பட்டியலிட்டுள்ளது. உலகிலுள்ள நாடுகளில் மொத்தம் 180 நாடுகளில் நடைபெறும் ஊழல்களை அலசி ஆராய்ந்து தரவரிசைப் பட்டியலை  Transparency International அமைப்பு  வெளியிட்டுள்ளது.

அரசு வழங்கும் பொதுசேவை மற்றும் அரசுமட்டத்தில் ஊழல் என்பனவற்றில் நடைபெறும் ஊழல்களே அதிக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் ஆஸ்திரேலியா உலகில் குறைவான ஊழல் நடக்கும் நாடுகளில் 13 ஆவது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் ஊழல் குறைவான நாடுகள் பட்டியலில் சரிந்துவருவதாக இந்த பட்டியல் காட்டுகிறது. இதன்மூலம், ஆஸ்திரேலியாவில் ஊழல் அதிகரித்துவருவதாக இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது.

மிக குறைந்த ஊழல் நடக்கும் நாடுகளில் முதலிடத்தில் நியூசிலாந்து நாடு உள்ளது.

இரண்டாம் இடம்: டென்மார்க்    

6 ஆவது இடம்: சிங்கப்பூர்         

13 ஆவது இடம்: ஆஸ்திரேலியா      

62 ஆவது இடம்: மலேசியா         

81 ஆவது இடம்: இந்தியா         

91 ஆவது இடம்: இலங்கை

180 ஆவது இடம்: சொமாலியா

பிற நாடுகள் பெற்றிருக்கும் இடங்களைப் பார்க்க:

www.transparency.org/news/feature/corruption_perceptions_index_2017            


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now