SKIP TO MAIN CONTENT

மனுஸ் விடயத்தில் மனிதாபிமான தீர்வு எட்டப்பட வேண்டும்- ஐ.நா வலியுறுத்தல்!

The UN committee urged Australia to end offshore processing and bring the men on Manus to Australia or another safe country.
Source: AAP/Refugee Action Coalition

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

பப்புவாநியூகினியின் மனுஸ் தீவிலுள்ள 800 அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியா கைவிட்டுவிட்டதாக ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பான UNHCR குற்றம்சாட்டியுள்ளது.

ஆஸ்திரேலியா தனது கடல்கடந்த தடுப்புமுகாம் கொள்கையால் உருவாக்கிய குழப்பங்களுக்கு முழுப்பொறுப்பேற்று, அதற்கு மனிதாபிமான ரீதியிலான தீர்வைக் காண வேண்டுமென UNHCR-இன் பேச்சாளர் Cecile Pouilly வலியுறுத்தியுள்ளார்.

மனுஸ்தீவிலுள்ள அகதிகள் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் பாதுகாப்பற்ற நிலையில் எதிர்காலம் என்ன என்று தெரியாமல் வாழ்கின்ற பின்னணியில்,  ஆஸ்திரேலியா தனது பொறுப்பினை உணர்ந்துகொள்ளவேண்டுமென தாம் மீண்டும் வலியுறுத்துவதாக Cecile Pouilly தெரிவித்தார்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now