நாட்டிலுள்ள மூன்றில் ஒரு வீதமான தொழிலாளர்களுக்கான superannuation, செலுத்தப்படாமலோ அல்லது குறைவாகவோ செலுத்தப்படுவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.
Industry Super Australia மற்றும் CBUS ஆகியன இணைந்து மேற்கொண்ட ஆய்விலேயே இது தெரியவந்துள்ளது.
இதன்படி 2013-2014 காலப்பகுதியில் நாடுமுழுவதுமுள்ள 2.4 மில்லியன் தொழிலாளர்களின் சம்பளத்தில், $3.6 பில்லியன் டொலர்கள் superannuation-க்கென கழிக்கப்படுவதாகவும், ஆனால் அவை குறித்த பணியாளர்களின் superannuation கணக்குகளைச் சென்று சேர்வதில்லை எனவும் இந்த ஆய்வு கூறுகின்றது.
மாதமொன்றுக்கு 450 டொலர்களுக்கு மேல் சம்பளம் வாங்கும் ஒரு தொழிலாளருக்கு ஆகக்குறைந்தது 9.5வீதம் superannuationஆக செலுத்தப்பட வேண்டுமென்பது கட்டாயமாகும்.
ஆனால் பெரும்பாலும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் தமது தொழிலாளர்களுக்கு superannuation செலுத்தாமல் ஏமாற்றுவதாக குறிப்பிடப்படுகின்றது.
எனவே இந்த விடயம் தொடர்பில் ATO-வரித்திணைக்களம் உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டுமென Industry Super Australia வலியுறுத்தியுள்ளது.
Share
