SKIP TO MAIN CONTENT

உங்கள் காரில் ஆபத்தான airbags பொருத்தப்பட்டிருக்கிறதா?

Takata Airbags recall
Source: Pixabay (Creative Commons)

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவிலுள்ள பல வகை கார்களில் பொருத்தப்பட்டுள்ள Takata airbags-இல் பழுது ஏற்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கடந்த வருடம் அவை மீளப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், இவ்வறிவித்தல் மீண்டும் விடுக்கப்பட்டுள்ளது.

ஆபத்தை விளைவிக்கக்கூடிய Takata airbags பொருத்தப்பட்ட கார்கள் இன்னமும் பயன்பாட்டில் உள்ளதாகவும், குறித்த airbags-ஐ மாற்றுவதற்காக வாகன உரிமையாளர்கள் தம்மை அணுகவில்லை எனவும் கார் விற்பனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சுமார் 1.8 மில்லியன் airbags ஆஸ்திரேலிய கார்களில் பொருத்தப்பட்டுள்ளதாகவும், உங்கள் காரிலும் அதேவகை பொருத்தப்பட்டுள்ளதா என்பதை அனைவரும் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உங்களது காரில் பொருத்தப்பட்டுள்ள airbags மாற்றப்பட வேண்டுமா என்பதைத் தெரிந்துகொள்ள https://ismyairbagsafe.com.au/ என்ற இணைப்புக்குச் செல்லுங்கள்.

Takata airbags மீளப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து சுமார் 930,000 வாகனங்களிலிருந்த 1.1 மில்லியன் பழுதுள்ள airbags மாற்றப்பட்டதாக The Australian Competition and Consumer Commission தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் விபத்து மூலம் ஏற்பட்ட 23 மரணங்களுக்கும், 230 பேர் படுகாயங்களுக்குள்ளானதற்கும் குறித்த airbags காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now