SKIP TO MAIN CONTENT

உங்கள் தொப்பையை உடனே அகற்ற இதோ ஒரு சந்தர்ப்பம்!!

'வண்டி' அல்லது தொப்பையினால் உங்களின் அழகு கெடுவதுடன் மட்டுமன்றி அதற்கும் மேலாக உங்களின் சுகாதாரத்துக்கும் மிகவும் கேடாகும். இதை கட்டுப்பாட்டினுள் வைத்திருக்காவிட்டால் ஆபத்தான நோய்கள் உங்களை பிடித்துவிடும்.

CC
Rising obesity bringing rising surgery numbers to fight it Source: AAP

2 min read

Published

By Praba Maheswaran


Skip to article content

தொப்பையை அல்லது எடையைக் குறைக்கப் பல வழிகள் உள்ளன. பொதுவாக மிகக்கடுமையான உணவுக்கட்டுப்பாடு, ஒழுங்கான உடற்பயிற்சி ஆகியன எமது எடையைக் குறைக்க உதவுவது மட்டுமன்றி எமது ஆரோக்கியமான வாழ்வுக்கும் வழியமைக்கும்.

ஆனால் தற்போது ஆஸ்திரேலியர்களிடையே Weight-loss surgery எனப்படும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளில், உடற்பருமன் அறுவைச்சிகிச்சை செய்தோரின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக The Australian Institute of Health and Wellbeing அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Christine Naim என்பவருக்கு அவரது அதீத உடற்பருமன் காரணமாக அவரது பிள்ளைப் பாக்கியம் அதாவது குழந்தை பெறுவது தடைப்பட்டுள்ளது. 130Kg எடையுடைய அவர் குழந்தைகளுக்காக ஏங்குகிறார். ஆனால் அவரது ஆசை கனவாகவே இருந்துள்ளது.

"After the doctors were telling me, 'Oh, you're not going to be able to have children, you're not going to be able to have children,' it just made me feel like, 'There's no point continuing on with life, basically.'"

ஆனால், கடந்த 8 மாதங்களில் Christine Naim இல் ஒரு வித்தியாசம் தெரிகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் அவர் இரைப்பை அறுவை சிகிச்சையை பெற்றிருந்ததால், அவர் கிட்டத்தட்ட 50 கிலோகிராம் குறைத்துவிட்டார். இப்போது அவர் ஆரோக்கியமானவர் போல் தோற்றமளிக்கிறார்.    

எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சைக்காகக் மிக மிக அதிகரித்துவரும் பல்லாயிரக்கணக்கானோரில் Christine ம் ஒருவர் எனக் கூறுகிறார் The Australian Institute of Health and Wellbeing அமைப்பின் Jenny Hargreaves.

"And we have found that the rates of surgery have gone up quite a lot over the last 10 years. So, in 2005-06, there were about 9,300 episodes of surgery in hospitals for weight-loss surgery. But in 2014/15, that number had gone up to 22,700 admissions for weight-loss surgery."

2015ம் ஆண்டில் $63மில்லியன் டொலர் Medicare செலவிலேயே 125,000 gastric procedures செய்யப்பட்டுள்ளன.

எடைக்குறைப்பு அறுவைச் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகக் கூறுகிறார் Sydney gastrointestinal surgeon Dr David Martin.

"We know that fasting diets don't work, unfortunately. Healthy diets are another thing. We live in an obesogenic society. You don't have to get out and move around all day. Access to sugar, which we crave, is very easy. And people getting out and about and doing healthy activity, as well as normal everyday transport and eating healthy food, is becoming more difficult."

2015 இல் இவ்வாறான எடைக் குறைப்பு அறுவைச்சிகிச்சை செய்தோரில் 80 வீதமானவர்கள் பெண்களாகும். அதிலும் அதிகமானவர்கள் 34இக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை ஆய்வுகளின்படி மருத்துவரீதியாக பெண்களைவிட ஆண்களே உடற்பருமன் கூடியவர்கள். பொதுவாக மூன்றில் இரண்டு ஆஸ்திரேலியர்கள் obese எனப்படும் அதிகரித்த பருமனுடையவர்கள்.

"People are more aware of it -- from that respect, there's more of a need for it. We're more aware that the alternatives don't work as well. And, also, with larger volumes of patients coming through now, safer operations, with social media and patient interaction, people are more aware of the outcomes of surgery."

Christine Naim போன்றவர்களுக்கு இம்மாதிரியான அறுவைச்சிகிச்சை அவர்களது வாழ்க்கையையே மாற்றிவிடுகின்றன. தற்போது மிக மகிழ்ச்சியாக இருக்கும் அவர் சொந்தமாக ஒரு குழந்தை பெற்று ஒரு புது வாழ்வுக்காக ஆயத்தமாகிறார்.

"I feel so good getting on those scales now. So good. Best thing ever. In September, when I had the surgery, I weighed 130 kilos. I'm now at 83 kilos and hoping to lose another 13 to be at my happy weight."

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now