ஐ.நாவின் அங்கமான UNESCO அமைப்பின் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையும் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நகரங்களை, கைவினைப் பொருட்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை, நகர வடிவமைப்பு, திரைப்படம், உணவு, இலக்கியம், ஊடகக் கலை மற்றும் இசை என பல பிரிவுகளின் கீழ் UNESCO அமைப்பு அங்கீகாரம் அளித்துவருகிறது.
இதன்படி இசைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதைப் பாராட்டி, சிறந்த படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கைவினைப் பொருட்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை பிரிவில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரும் பாரம்பரிய இசைக்காக வாரணாசி(காசி) உள்ளிட்ட இந்திய நகரங்களும் UNESCO படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்தப் புதிய நகரங்களுடன் சேர்த்து உலகம் முழுவதும் உள்ள 72 நாடுகளைச் சேர்ந்த 180 நகரங்கள் UNESCO பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
