SKIP TO MAIN CONTENT

பல்கலைக்கழகங்களுக்கு அரசு வழங்கி வரும் நிதியில் மாற்றம்

Federal அரசு பல்கலைக்கழகங்களுக்கு வழங்கி வரும் நிதி குறித்து ஏற்கனவே முன் வைத்த மாற்றங்கள் செனட்சபையில் வெற்றி பெறாத காரணத்தினால் பல்கலைக்கழகங்களுக்கான புதிய நிதி திட்டத்தினை அரசு முன் வைத்துள்ளது.

University Students
Source: ABC Australia

1 min read

Published

By Selvi

Source: ABC Australia



Skip to article content

கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி federal அரசு 2.2 மில்லியன் சேமிக்க முடியும். அம்மாற்றங்களை நடைமுறைப்படுத்த நாடாளுமன்ற அனுமதி தேவையில்லை என்பதும்குறிப்பிடத்தக்கது.

Federal அரசு அடுத்த வருடம் முதல், 2017ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு வழங்கிய நிதி அளவையே தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு வழங்க உள்ளது. ஆகவே பல்கலைக்கழகம் தங்களுக்கு வழங்கும் நிதியினை இத்திட்டத்தின் கீழ் இணையும் மாணவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும். இதனால் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொள்வது கடினமாகும் என்று கூறப்படுகிறது.

மருத்துவத்துறையில் பயிலும் மாணவர் ஒருவர் தங்களின் படிப்பிற்காக Federal அரசிடமிருந்து 150,000 டாலர்கள் வரை மட்டுமே தங்களின் வாழ்நாளில் கடனாக பெற்றுக்கொள்ள முடியும், மற்றைய துறையில் பயிலும் மாணவர் ஒருவர் 104,440 டாலர்கள் வரை மட்டுமே கடனாக பெற்றுக்கொள்ள முடியும். இக்கடனை தாங்கள் வருடத்திற்கு 45,000 டாலர்கள் சம்பாதிக்க ஆரம்பிக்கும் போது திருப்பி செலுத்த வேண்டும்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now