SKIP TO MAIN CONTENT

விலங்குகளை கருணைக்கொலை செய்ய மேலதிக துப்பாக்கி ரவை கேட்டுள்ள பண்ணையாளர்கள்!

Sheep are seen on a fire-damaged property in Sarsfield, East Gippsland, Victoria.
Sheep are seen on a fire-damaged property Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

காட்டுத்தீயினால் ஏற்பட்ட  கடுங்காயங்களால் உயிர்பிழைக்கமுடியாமல் உத்தரித்துக்கொண்டிருக்கும் விலங்குகளை சுட்டுக்கொல்வதற்கு பெருந்தொகையான துப்பாக்கி ரவைகளை மேலதிகமாக பண்ணையாளர்கள் வாங்கிவருகிறார்கள்.

தெற்கு ஆஸ்திரேலியாவின் Kangaroo Island-இல் கருகிய நிலையில் இன்னமும் உயிரோடுள்ள செம்மறியாடுகளை கருணைக்கொலை செய்வதற்கு அங்குள்ள பண்ணை உரிமையாளர்கள் பல்லாயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகளை மேலதிகமாக கொள்முதல் செய்துள்ளார்கள் என்று BlazeAid தன்னார்வ தொண்டு அமைப்பின் தலைவர் Kevin Butle கூறியுள்ளார்.

பண்ணையாளர்களுக்கு உதவி செய்வதற்கு ஏதுவாக கூடுதல் துப்பாக்கி ரவைகளை பெற்றுக்கொடுக்கும்படி துப்பாக்கி ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

BlazeAid தன்னார்வ தொண்டு அமைப்பின் தலைவர் மேலும் கூறும்போது- விலங்குகளை கருணைக்கொலை செய்வதற்கு சுமார் 50 ஆயிரம் சுற்று ரவைகளுடன் வந்த விற்பனை முகவர், அனைத்து ரவைகளும் தீர்ந்த நிலையில் வெறுங்கையுடனே சென்றதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை Kangaroo Island-இல் சுமார் ஒரு லட்சம் வரையான செம்மறியாடுகளையும் மேலும் 25 ஆயிரம் விலங்குகளையும் காட்டுத்தீ பலியெடுத்திருக்கிறது. இவற்றைவிட, பல்லாயிரக்கணக்கான குவாலாக்களும் காட்டுத்தீயில் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now