ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்ததற்கிணங்க ஆஸ்திரேலியா தனது சொந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை, விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது.
தெற்கு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சர்வதேச வானியல் சம்மேளனத்தின் 68வது மாநாட்டில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நடவடிக்கைகளில் பங்கெடுத்துவந்தாலும், சொந்தமாக ஒரு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆஸ்திரேலியாவுக்கு கிடையாது.
இந்தநிலையில் சர்வதேச ஒத்துழைப்பு குறித்த ஆய்வுக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் அடிப்படையில், ஒரு நீண்டகாலத் திட்டத்துடன், ஆஸ்திரேலிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஆஸ்திரேலியாவைப்பொறுத்தவரை பொருளாதார ரீதியிலும் இது முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.
