அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி Melania-க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ட்ரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ட்ரம்ப் மற்றும் மனைவிக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது.
COVID-19 தொற்று ஏற்பட்டிருப்பது தொடர்பில் Twitter-இல் தகவல் வெளியிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், தனது மனைவியுடன் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்புக்கு 74 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
Share
