SKIP TO MAIN CONTENT

குவாஜா திருமணம்: மதம் மாறி கைப்பிடித்தார் காதலி!

Instagram
Source: Instagram

1 min read

Published

Updated

Presented by Renuka Thuraisingham



Skip to article content

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் உஸ்மான் குவாஜாவின் திருமண நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏற்கனவே முஸ்லிமாக மதம் மாறிய காதலியை ஆஸ்திரேலிய சட்ட விதிகளின்படி நேற்று அவர் உத்தியோகபூர்வமாக திருமணம் செய்துகொண்டார்.

ஆஸ்திரேலிய அணியில் விளையாடும் முஸ்லிம் பின்னணியுடைய முதலாவது வீரர் உஸ்மான் குவாஜா (வயது 31) கடந்த 2016 ஆம் ஆண்டு தனது காதலிக்கு அமெரிக்காவில் வைத்து மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தம் செய்திருந்தார். குவாஜாவின் காதலி Rachel McLellan (வயது 22) பிறிஸ்பன் மாநிலத்தை சேர்ந்தவர். அங்கு கத்தோலிக்க பாடசாலையில் கல்விகற்றவர். குவாஜாவை நிச்சயதார்த்தம் செய்த பின்னர் முஸ்லிமாக மதம் மாறிக்கொண்டவர்.

தனது மதமாற்றம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கும்போது - குவாஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மதம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் அறிவேன். அதன்பிரகாரம் குவாஜாவுடன் பேசி விருப்பத்துடன்தான் மதம் மாறினேன். தவிர, இந்த மதமாற்றத்துக்கு எந்த அழுத்தமும் காரணமல்ல - என்றார்.

நேற்றையதினம் பிறிஸ்பனில் நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு தனிப்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மாத்திரம் அழைக்கப்பட்டிருந்தனர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now