ஆஸ்திரேலியாவில் அண்மைக்காலமாக ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்த உட்கட்சிப்பூசல்கள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை இன்மையால் ஆசிய பிராந்திரயத்தில் இராஜதந்திர ரீதியில் செல்வாக்கு செலுத்தும் வலுவை ஆஸ்திரேலியா பெருமளவில் இழந்திருக்கிறது என்று The Lowy Institute அமைப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு அரசியல் பிரச்சினையில் அதிக நேரத்தையும் வலுவையும் பயன்படுத்திக்கொண்டிருந்த காரணத்தினால் நாட்டின் தலைவர்கள் வெளிவிவகாரங்களை இறுக்கமாக கடைப்பிடிப்பதற்கு தவறிவிட்டார்கள் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஆசிய பிராந்திரயத்தில் சர்வதேச நாடுகள் கொண்டுள்ள பல்வேறுதுறைசார் வல்லமைகள் குறித்த மதிப்பீட்டினை மேற்கொண்டு அந்த விவரங்களை வெளியிட்டுள்ள The Lowy Institute, ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியாவை ஏழாவது இடத்தில் தரப்படுத்தியுள்ளது.
The Lowy Institute அமைப்பின் மதிப்பீட்டின் பிரகாரம், ஆஸ்திரேலியா-பொருளாதார வளங்களிள் அடிப்படையிலான வளர்ச்சிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்திலும், படைத்துறை வலுபடைத்த நாடுளின் பட்டியலில் எட்டாவது இடத்திலும், நாட்டுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிக்கக்கூடிய சக்திகொண்ட நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்திலும், இராஜதந்திர செல்வாக்கு செலுத்தக்கூடிய வலுவுடைய நாடுகளின் பட்டியலில் எட்டாவது இடத்திலும், பொருளாதார உறவுகளின் ஊடாக நாடுகளில் செல்வாக்கு செலுத்தக்கூடிய சக்திகொண்ட நாடுகளின் பட்டியலில் எட்டாவது இடத்திலும், படைத்துறை உறவுகளின் அடிப்படையிலான பாதுகாப்பு வலையமைப்புக்கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்திலும், கலாச்சார ரீதியான செல்வாக்கின் மூலம் உலகநாடுகளில் மாற்றுப்பார்வையொன்றை ஏற்படுத்துக்கூடிய வலுவுடைய நாடுகளின் பட்டியலில் ஒன்பதாவது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் அமெரிக்கா,சீனா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் எந்த இடங்களை பிடித்திருக்கின்ற என்று அறிவதற்கு கீழுள்ள இணைப்பிற்குச் செல்லுங்கள்.
https://power.lowyinstitute.org
