SKIP TO MAIN CONTENT

உடலுறுப்புத்தானம் செய்வதற்கான நடைமுறை இலகுவாகின்றது!

“Organ donation is the ultimate act of loving kindness,” says double-lung transplant recipient Ellice Mol.
Source: Flickr

1 min read

Published

Presented by Renuka.T


Skip to article content

ஆஸ்திரேலியாவில் உடலுறுப்புத்தானம் செய்வோரின் வீதத்தை இரட்டிப்பாக்குவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

இதன்படி உடலுறுப்புத் தானம் செய்வதற்காக இணையம் ஊடாக பதிவு செய்யும் நடைமுறை இலகுபடுத்தப்பட்டுள்ளது.

Donatelife என்ற இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலம் உடலுறுப்புத் தானத்திற்கு இலகுவாக பதிவுசெய்துகொள்ள முடியும்.

அதேநேரம் உடலுறுப்புக்களைத் தானம் செய்வது பற்றிய முடிவை நமது அன்புக்குரியவர்களிடம் சொல்லிவைப்பது அவசியமாகும்.

தற்போது நாடுமுழுவதும் 33 வீதமானவர்கள் உடலுறுப்புக்களைத் தானம் செய்வதற்காக பதிவு செய்திருக்கின்ற நிலையில், இன்னும் பலர் அவ்வாறு செய்ய விரும்பினாலும் தம்மைப் பதிவு செய்துகொள்வதில் பின்தங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வாரமான Donate Life Week ,  ஜுலை 30 ம் திகதி முதல் கடைப்பிடிக்கப்படும் நிலையில், அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வதற்கு பதிவு செய்வது பற்றி யோசித்துப் பார்க்கவேண்டுமென Aged Care அமைச்சர் Ken Wyatt கோரியுள்ளார்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now