Dragon Fish எனப்படுகின்ற கடலினத்தை பொதியொன்றில் தண்ணீர் விட்டு அதில் உயிரோடு கொண்டுவந்த வியட்நாம் பின்னணி கொண்ட ஒருவரை அடிலெய்ட் விமானநிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இந்த மீன்வகையை கடத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்ற காரணத்தினால் குறிப்பிட்ட நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினார்கள்.
இவரை பிணையில் செல்வதற்கு அனுமதித்துள்ள நீதிமன்றம் மே 15 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது.
Asian Arowana என்ற பெயருடைய குறிப்பிட்ட கடலினத்தை ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டுவருவது குற்றமாகும். தடைசெய்யப்பட்ட இந்தக்கடலினத்தை கடத்துபவர்களுக்கு பத்து வருடங்கள் வரையான சிறை அல்லது இரண்டு லட்சத்து 10 ஆயிரம் வரையிலான தண்டப்பணம் அறவிடப்படும் என்ற சட்டம் ஆஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ளது.
மலேசியாவிலிருந்து வந்த இந்நபர் குறிப்பிட்ட இந்த மீனை பொலீத்தீன் பையில் தண்ணீர் வீட்டு அதில் உயிரோடு கொண்டுவந்தததாகவும் விமானநிலையத்தில் அவர் கைது செய்யப்படும்போது அந்த மீன் கிடந்த தண்ணீர் பையை கழுத்தில் கொழுவியபடி வந்துகொண்டிருந்தார் என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
