ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச்சக்தியை எரித்து பெறப்படும் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலைகள் மூடப்பட்டுவருவதன் காரணமாக வீடுகளுக்கான மின்சாரத்தின் விலை உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஒவ்வொரு வீட்டுக்கும் மின்கட்டணம் 78 டொலர்களால் உயரும் என்று Australia Energy Market Commission வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
ஆனால் விக்டோரியா மாநிலத்தின் Hazelwood இல் இயங்கும் நிலக்கரிச்சக்தியால் இயங்கும் மின்சாரம் உற்பத்தி ஆலை மூடப்படுவது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாககவும், இதனால் மின்கட்டணம் உயர்கிறது என்றும் மின்சக்தி விநியோக நிறுவனங்கள் கூறுவதை விக்டோரிய மாநில எரிசக்தித்துறை அமைச்சர் Lily D'Ambrosio நிராகரித்தார். மின்சக்தி விநியோக நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்வதே மின்சக்திக் கட்டணம் உயர முக்கிய காரணம் என்றார் அவர்.
Share
