அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் ஆஸ்திரேலியாவுக்குள் வருவதற்கான அனுமதி வழங்கப்படுவதாக வெளியான செய்தி பொய்யானது என ஆஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஓமான் மற்றும் Fiji ஆகிய நாடுகளின் பிரஜைகள் ஆஸ்திரேலியாவிற்குள் விசா இல்லாமல் வந்து போவதற்கான உடன்படிக்கை நடைமுறைக்கு வருவதாக பல இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
இதனை மறுத்துள்ள குடிவரவுத் திணைக்களம் இது ஒரு வதந்தி எனவும் ஆஸ்திரேலியாவின் குடிவரவுக் கொள்கையில் புதிதாக எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை எனவும் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
Share
