ஆஸ்திரேலிய தேர்தல் முடிவுகள் உத்தியாகபூர்வமாக வெளிவந்துள்ள நிலையில் 46 ஆவது நாடாளுமன்றம் அடுத்த மாதம் இரண்டாம் திகதி கூடவுள்ளது.
பிரதமர் Scott Morrison தலைமையில் ஜூலை இரண்டாம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வுகள் மூன்று நாட்களுக்கு இடம்பெறும் என்றும் அதன் பின்னர் இரண்டு வார விடுறையின் பின்னர் மீண்டும் கூடும் என்றும் நாடாளுமன்ற நாட்காட்டி தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் கூடவுள்ள நாடாளுமன்றம் செப்டெம்பர் ஆரம்பத்திலும் அக்டோபர், நவம்பர் நடுப்பகுதிகளிலும் டிசெம்பர் ஆரம்பத்திலும் என மொத்தம் 39 நாட்களுக்கு இந்த ஆண்டுக்கான அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றத்தில் 77 உறுப்பினர்கள் லிபரல்-நஷனல் கூட்டணி வரிசையிலும் 68 உறுப்பினர்கள் லேபர் வரிசையிலும் ஆறு உறுப்பினர்கள் நடுநிலை வரிசையிலும் உட்காருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் செனட் அவையில் 35 லிபரல்-நஷனல் கூட்டணி, 26 லேபர், 9 கிரீன்ஸ், 2 One Nation, 2 Centre Alliance, 1 Australian Conservatives மற்றும் Jacqui Lambie உள்ளிட்ட உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
Share
