SKIP TO MAIN CONTENT

வாக்காளர்களின் ஏகோபித்த பங்கேற்பு: முடிவுகள் தாமதமாகலாம் என்று எதிர்பார்ப்பு!

Voting
Voting Source: SBS

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

இம்முறை தேர்தலில் பெருமளவு வாக்காளர்கள் முன்வாக்குப்பதிவில் ஈடுபட்டிருப்பதால் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதங்கள் ஏற்படலாம் என்று தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி சுமார் 30 லட்சம் பேர் முன்வாக்குப்பதிவில் இணைந்து வாக்களிப்பினை நிறைவுசெய்திருக்கிறார்கள்.

கடந்த வருடம் தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்னரான வாக்குப்பதிவு 18 லட்சமாகவே இருந்திருக்கிறது.

அதேவேளை, தபால் மூல வாக்களிப்பும் பெருமளவில் இம்முறை பதிவாகியிருக்கிறது.

இம்முறை 14 லட்சம் பேர் தபால் மூல வாக்களிப்புக்கு பதிவு செய்திருப்பதாக கூறியிருக்கும் தேர்தல் ஆணையாளர் இது கடந்த தேர்தலைவிட அதிக எண்ணிக்கை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்வாக்களிப்பில் கலந்துகொண்டவர்களின் வாக்கு அட்டைகள் எதிர்வரும் சனிக்கிழமையன்று தேர்தல் முடிந்த கையோடு மாலை ஆறு மணிக்கு எண்ணத்தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் இயங்கும் தேர்தல் ஆணையகம் இம்முறை தேர்தலில் வாக்காளர் அட்டைகளை எண்ணுவதில் கடினங்களை எதிர்நோக்கலாம். அதன் விளைவாக தேர்தல் முடிவுகள் வெளியாகுவது தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now