ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து மாநிலங்களினுடன் ஒப்பிடுகையில் விக்டோரியா ஆண்களும் கன்பரா பெண்களும் அதிக ஆயுட்காலம் கொண்டவர்கள் என்று ஆஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விக்டோரியா ஆண்களின் ஆயுட்காலம் 81.3 ஆண்டுகள் என்றும் கன்பரா பெண்களின் ஆயுட்காலம் 85.2 ஆண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் கணக்கிடப்பட்ட மதிப்பீட்டின்படி ஆஸ்திரேலியாவிலுள்ள ஆண்களின் ஆயுட்காலம் 80.5 ஆண்டுகளாக கடந்த வருடம் அதிகரித்திருப்பதாகவும் பெண்களின் ஆயுட்காலம் தொடர்ந்தும் 84.6 ஆண்டுகளாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆஸ்திரேலியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு குறைந்த ஆயுட்காலம் உடைய மாநிலமாக northern territory காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் சராசரி ஆயுட்காலத்தை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஐ.நா. தரவரிசைப்படி ஆஸ்திரேலியா ஆறாமிடத்தில் உள்ளதாகவும் ஜப்பான் - சுவிஸ் - ஸ்பெய்ன் ஆகியவை முதல் மூன்றிடங்களையும் பிடித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
