கடந்த ஆண்டு இடம்பெற்ற விக்டோரிய மாநில தேர்தலில் வாக்களிக்கத் தவறிய சுமார் 1 லட்சத்தி 90 ஆயிரம் வாக்காளர்கள் தலா 81 டொலர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தேர்தலில் வாக்களிக்கத் தவறிய இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் வாக்களிக்காமைக்கான காரணம் கேட்டு கடந்த மார்ச் மாதம் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தநிலையில் இவர்களில் 60 ஆயிரம் பேர் வழங்கிய பதில்கள் ஏற்புடையதாக இருந்ததாகவும் ஏனையோர் தண்டப்பணம் செலுத்த வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அபராதம் செலுத்துமாறு பணிக்கப்பட்டவர்கள் குறித்த தொகையை 35 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அல்லது review-மீளாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது நீதிமன்றில் விண்ணப்பிக்கலாம். இவற்றைச் செய்யத்தவறும் பட்சத்தில் மேலதிக தொகை அபராதமாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
