SKIP TO MAIN CONTENT

விக்டோரிய மாநில தேர்தல்: பதவி விலகினார் எதிர்கட்சித் தலைவர்- புதிய அமைச்சரவையில் 50 வீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு!

Premier Daniel Andrews and Opposition Leader Matthew Guy.
Premier Daniel Andrews and Opposition Leader Matthew Guy. Source: AAP Image/Julian Smith

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

விக்டோரிய மாநில தேர்தலில் லிபரல் கட்சி படுதோல்வியடைந்துள்ள நிலையில் அக்கட்சியின் தலைமைத்துவப் பதவியிலிருந்தும் எதிர்கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகிக் கொள்வதாக Matthew Guy அறிவித்துள்ளார்.

இவரது இடத்திற்கு Michael O'Brien மற்றும் John Pesutto ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள விக்டோரியாவின் லேபர் கட்சியினர் தமது அடுத்த கட்ட நடவடிக்கைகளில் மும்முரமாகியுள்ளனர்.

அந்த வகையில் தனது புதிய அமைச்சரவையில் அரைவாசிப்பேரை பெண்களாக நியமிக்கப்படுவதாக விக்டோரிய Premier Daniel Andrews தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையிலிருந்து சிலர் தாங்களாகவே விலகுவதாக அறிவித்துள்ளதை அடுத்து அந்த இடங்களை பெண்களுக்கு ஒதுக்குவதாக Daniel Andrews மேலும் தெரிவித்திருக்கிறார்.

ஆண் - பெண் சமநிலையை பேணுகின்ற அமைச்சரவையைக்கொண்ட முதலாவது மாநிலமாக விக்டோரியாவை வரலாற்றில் முன்னிறுத்தும் வகையிலும் இந்த முயற்சியை எல்லா மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக அறிவிக்கும் வகையிலும் Andrews அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

தமிழர்கள் செறிந்து வாழும் Dandenong பிரதேச உறுப்பினராக இம்முறை தெரிவான Gabrielle Williams அவர்களும் Andrews அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறவுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now