SKIP TO MAIN CONTENT

விக்டோரியா மாநில வீதிவிபத்துக்களில் இதுவரை 104 பேர் பலி!

SBS
File image Source: SBS

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

விக்டோரியாவில் இவ்வருடம் இடம்பெற்ற வீதிவிபத்துக்களில் இதுவரை சுமார் 104 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 62.5 வீத அதிகரிப்பு என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நாடுமுழுவதும் ஈஸ்டர் விடுமுறை காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் 9 மாத குழந்தையும் அடங்குவதாக குறிப்பிடப்படுகிறது.

விக்டோரியா, நியூசவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா, குவீன்ஸ்லாந்து மாநிலங்களில் இடம்பெற்ற பல்வேறு வீதி விபத்துக்களில் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்று பொலீஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் மாத்திரம் ஈஸ்டர் விடுமுறை காலப்பகுதியான மூன்று தினங்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை ஓட்டும்போது தொலைபேசியை உபயோகிப்பது உட்பட சகல விதமான மீறல்கள் குறித்தும் தாங்கள் கடும் நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும் இருந்தாலும் வீதி விதிமுறைகளை மீறுபவர்கள் தொடர்ந்தும் அதிகரித்துவருகிறார்கள் என்றும் பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now