விக்டோரியாவில் அடுத்த வருடம் முதல் சைகை வழி தொடர்பாடல் முறையான Auslan மொழியை முன்பள்ளிகளில் இணைத்துக்கொள்வதற்கு விக்டோரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்த தொடர்பாடல்முறையை முதற்கட்டமாக 26 முன்பள்ளிகளில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவிப்புலனற்றவர்கள் சமூகம் விக்டோரிய அரசாங்கத்தின் இந்த முன்னெடுப்பினை வரவேற்றிருப்பதுடன் ஆஸ்திரேலியாவின் ஏனைய மாநிலங்களும் இந்த மொழியை முன்பள்ளிகளில் அறிமுகப்படுத்தும் வகையில் நிதி ஒதுக்கீட்டினை மேற்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த வருடம் முதல் விக்டோரியாவின் 26 முன்பள்ளிகளில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த சைகை வழிமொழி கற்கைநெறி மாணவர்களுக்கு கிழமை ஒன்றில் மூன்று மணிநேரம் கற்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பள்ளிகளில் இந்த கற்பித்தலை மேற்கொள்ளக்கூடிய ஆசிரியர்களை பாடசாலைகள் பெற்றுக்கொள்வதும் கடினமான காரியம் என்றாலும்கூட அதற்குரிய நடவடிக்கைகளில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக விக்டோரிய அரசு தெரிவித்துள்ளது.
