விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் சீரற்ற காலநிலை தொடர்வதால் ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் அசாதாரண காலநிலை மாற்றங்களினால் சுவாசப்பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பான நடைமுறைகளை கடைப்பிடிக்கும்படி சுகாதர வட்டாரங்கள் எச்சரித்திருக்கின்றன.
விக்டோரியாவில் உயர் வெப்பநிலை சடுதியாக வீழ்ச்சியடைந்து மழையுடன் கடும் காற்றும் எற்படுகின்ற வாய்ப்பு இந்த வாரம் முழுவதும் எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், thunderstorm asthma எனப்படுகின்ற சுவாசப்பிரச்சினை அநேக ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றிலே கலக்கும் மகரந்த துணிக்கைகள் பரவலடைந்து ஒவ்வாமையுள்ளவர்களை தாக்கும் thunderstorm asthma எனப்படுகின்ற இந்த கொடிய நோய் 2016 ஆம் ஆண்டு 10 பேரை விக்டோரியாவில் காவு கொண்டதை சுகாதார வட்டாரங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
இதுபோல, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அனல் காற்று வளிமண்டலத்தை தொடர்ந்தும் மாசுபடுத்திக்கொண்டிருப்பதால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு இந்த மாற்றம் கடுமையான நோய் அறிகுறிகளை ஏற்படுத்தவல்லது என்பதால் தேவையான மருந்துகளை கைவசம் வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் thunderstorm asthma-வால் பாதிக்கப்படக்கூடும் என மருத்துவர்களால் எச்சரிக்கப்பட்டவர்கள் இயன்றவரை வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று சுதாதர துறையினர் அறிவித்துள்ளார்கள்.
