SKIP TO MAIN CONTENT

விக்டோரியாவில் இன்று Thunderstorm Asthma எச்சரிக்கை!

Image by AAP: The deadly thunderstorm asthma event in Victoria two years ago killed ten people.
Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

விக்டோரியா மாநிலத்தில் இன்று வெள்ளிக்கிழமை Thunderstorm Asthma எனும் சுவாசக்கோளாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய தினம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து பின்னிரவில் வீழ்ச்சியடைந்து மழைவரும் அறிகுறிகள் உள்ளதாக காலநிலை அவதானிப்பு திணைக்களம் எதிர்வுகூறியிருப்பதால் விக்டோரியாவின் மத்திய, வடமத்திய, தென்மேற்கு மற்றும் Northern Country, Mallee ஆகிய பகுதிகளில் Thunderstorm Asthma பாதிப்பிற்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

நேற்றைய தினம் வியாழக்கிழமை உயர் வெப்பநிலை எதிர்ப்பார்க்கப்பட்டபோதும் அவ்வளவாக அது இடம்பெறவில்லை என்றும் இன்று கடும் வெப்பநிலையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஏற்படுகின்ற உயர்வெப்பநிலை நள்ளிரவுக்கு முன்னர் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என்றும் சனிக்கிழமையும் அது தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக்காலநிலை Thunderstorm Asthma தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now