விக்டோரியா மாநிலத்தில் 2015 ஏப்ரல் முதல் 2016 மார்ச் வரையான காலப்பகுதியில் அதிகளவு கொலைகள் இடம்பெற்ற பிரதேசமாக Wyndham Vale காணப்படுகின்ற அதேநேரம் பாலியல் குற்றச்செயல்களின் கோட்டையாக Frankston திகழ்வதுடன் இங்கு பதிவான பாலியல் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.
அதுட்டுமல்லாமல் பெரிய பிராந்திய மையங்களான Ballarat, Shepparton ,Bendigo ஆகியனவும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்களாக காணப்படுகின்றன.
இவற்றோடு மெல்பேர்ன் CBD , Dandenong ஆகிய பிரதேசங்களிலும் கணிசமானளவு பாலியல் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
திருட்டுச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதியாக Kew வும் வேண்டுமென்றே புதர்த்தீ பற்ற வைக்கப்படும் பிரதேசமாக Broadmeadows-உம் காணப்படுகின்றது.
Mount Dandenong க்கு வடக்காக உள்ள Kalorama, விக்டோரியாவின் மிகவும் பாதுகாப்பான பகுதி என குறிப்பிடப்படுகின்றது. கடந்த ஆண்டு இங்கு 10 குற்றச்செயல்கள் மாத்திரமே பதிவாகியுள்ளன.
இதேவேளை விக்டோரியாவின் ஒவ்வொரு பகுதியிலும் குற்றச்செயல் வீதம் எப்படி இருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதற்கான Crime map ஒன்றை Fairfax வெளியிட்டுள்ளது.
smh.com.au/victoria என்ற இணைப்பிற்குச் சென்று உங்களது Postcode-ஐ பதிவிடுவதன் மூலம் நீங்கள் வாழும் இடம் எந்தளவு தூரம் பாதுகாப்பானது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
Share
