விக்டோரியாவில் நேற்று வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற மூன்று வீதி விபத்து சம்பவங்களில் நான்கு பேர் பலியாகியுள்ளார்கள்.
இந்த விபத்துக்களில் ஒன்றில் பெண்ணொருவரை காரினால் மோதிவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிச்சென்ற நபர் இன்று காலை பொலீஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ardeer பகுதியில் Ballarat வீதியில் இடம்பெற்ற குறிப்பிட்ட சம்பவத்தில் அந்தப்பெண் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, Mount Eliza பகுதியில் வீதியில் எதிரே வந்த வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் யூட் வாகனமொன்றில் சென்றுகொண்டிருந்த ஓட்டுனரும் அவருடன் சென்றவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். எதிரே வந்த வாகன ஓட்டுனர் நெஞ்சில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Mildura பகுதியில் இடம்பெற்ற இன்னொரு விபத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் வீதிக்கம்பம் ஒன்றுடன் வாகனம் மோதியதில் அந்த இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த வாகனத்தை ஓட்டிச்சென்றவரும் வாகனத்திலிந்து இன்னொருவரும் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
